பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி!  குவியும் பாராட்டுக்கள்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

இவர் தனது வெற்றி தொடர்பில் தெரிவிக்கையில் –

ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் ரூக்ஸ் டவுன் பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும், பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.