நாட்டின் கல்வித்துறையில் புதியதான சீர்திருத்தங்கள்! லண்டனில் முக்கிய கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெற்று வரும் உலகக்கல்வி மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய கல்வி இலக்குகளை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்