தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! 

யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக நேற்று (வியாழக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் கொல்லப்பட்ட மக்களுக்கு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் முன்பாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் அகப்பட்ட மக்களின் பசியைப் போக்க கஞ்சி வழங்கப்பட்டமையை நினைவுகூரும் முகமாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்