மக்களை வேண்டும் என்றே ஏழைகளாக்கியுள்ளது அரசு!  கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் 11 வீதமாக ஆக இருந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 25 வீதம் ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் அவர்களின் மீட்சிக்காக மிகக் குறைந்த மானியங்களையே அரசாங்கம் வழங்குவதாகவும் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவமில்லாத நடவடிக்கையால் இலங்கையில் சுமார் 55 லட்சம் ஏழைகள் இருக்கின்றனர் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்