சர்வதேச தாதியர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது,

மேற்படி நிகழ்வு வெள்ளிக்கிழமை)காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் வைத்தியர்கள், என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் தாதிய சேவையில் ஈடுபட்டு மறைந்த தாதியர்கள் இதன்போது நினைவுகூரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்