சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் சாதனை! 

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஐந்து தங்கப்பதக்கங்ளையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

உலக மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் 2023 மே 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பதக்கங்கள் ஊடாக இலங்கை சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தச் சாதனையை வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இவர்களின் இந்தச் சாதனையைக் கௌரவிக்கும் முகமாக வவுனியா கந்தசாமி கோவில் முன்றிலில் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

சண்முகநாதன் சஞ்சயன் (தங்கம்), தட்சணாமூர்த்தி மகிஷா (தங்கம);,ஜெயவர்த்தன செவுமினி இமேஷா (தங்கம்), குமார் கிருசாந்தன் (வெள்ளி), முருகன் வினோத் (தங்கம்). சிவகுமார் தர்ணிகா (தங்கம்), ராமநாதன் திவ்யா (தங்கம்) ஆகிய வீர, வீராங்கனைகளே நாட்டுக்கும் தமது பிரதேசத்துக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.