யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஆடுகளை ஏற்றிச் சென்றவர் கைது

வவுனியாவில் விதிமுறைகளை மீறி 54 ஆடுகளை கூலர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசைக்கு விதிமுறைகளை மீறி ஆடுகள் ஏற்றிச்செல்வதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலமையிலான குழுவினர் தாண்டிக்குளம் பகுதியில் குறித்த வாகனத்தை மறித்து சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது  விதிமுறைகளை மீறி 54 ஆடுகள் குறித்த கூலர் ரக வாகனத்தில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

பின்னர் குறித்த வாகனத்pத வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், வாகனத்தின் சாரதியான 42 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்