சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டாலே நாட்டை முன்னேற்ற முடியுமாக இருக்கும்! நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அத்துடன் நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சின் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால், அந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக சிங்கப்பூர் ஒரு காலத்தில் எம்மைவிட மிக மோசமான நிலையிலேயே இருந்தது. நாங்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த வரிசை யுகத்தைவிட மோசமான நிலையே அங்கு இருந்தது வந்தது.

ஆனால், இன்று அதற்கு மாற்றமான நிலையே காண்கிறோம். டொலர் மில்லியன் கணக்கில் கையில் வைத்துக்கொண்டு பெண் பிள்ளை ஒருவருக்குத் தனியாக வீதியில் சென்று வர முடியும். பயப்படத் தேவையில்லை. அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

அதேநேரம் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததால், தங்கம், வெண்கலம் இருக்கும் தென் ஆபிரிக்க நாடுகள் இன்னும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றன.அந்த நாடுகளின் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆனால், எமது நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. எமக்கு இருக்கும் வளங்கள் இந்தியாவில் கூட இல்லை. என்றாலும் நாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இன்னும் இல்லை. ஏதோ ஓர் இடத்தில் எமக்கு தவறி இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்துகொண்டால் எமக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நிலைக்கு வரமுடியும். அதற்காக எமது அமைச்சுக்களின் செயற்திறமையை அதிகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன் எமக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டி ஏற்பட்டது. வேறு மாற்று வழி இருக்கவில்லை. மற்ற நாடுகளுக்கு இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ள இலகுவாகவில்லை. நாணய நிதியத்தின் பணம் நிதி அமைச்சுக்கும் திறைசேரிக்கும் கிடைத்துள்ளது. அவர்கள் தங்களின் நடவடிக்கையை சரியான முறையில் செய்ததாக மக்கள் மத்தியல் கருத்தொன்று இருக்கிறது.

ஆனால், நீதி அமைச்சு சரியான முறையில் செயற்படாவிட்டால் நாணய நிதியத்தின் பணத்தை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் செல்வதற்கு இடமிருக்கிறது. குறித்த பணத்தை பெற்றுக்கொள்வதற்கு நிபந்தனைகளை பூரணப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களில் நூற்றுக்கு 90 வீதம் மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.

நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாமல்போனால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. நீதி அமைச்சின் வெற்றி தோலியிலேயே ஏனைய அமைச்சுக்களின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதனால் நாடொன்றில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாவிட்டால் மக்கள் வீதிக்கிறங்குவார்கள்.

இனங்களுக்கிடையில் நம்பிக்கை உறுதிப்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இனங்களிக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்தாமல் நாட்டொன்றை முன்னேற்ற முடியாது. – என்றார்.ல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.