சுவிட்ஸர்லாந்தின் ஓட்டப் பந்தயத்தில் அசத்திய 60 வயது இலங்கை தமிழன்!

கிராண்ட் பிரிக்ஸ் வான் பெர்ன் ஊடாக சுவிட்ஸர்லாந்தில்  ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல் பொன்னம்பலம் என்பவர் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இவர் கிளிநொச்சி-பூநகரி பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஆவார்.

249 பேர் பங்குபற்றிய இந்த ஓட்டப்போட்டியில் முருகவேல் பொன்னம்பலம், 124 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 4.7 கிலோ மீற்றர் தூரத்தை 30 நிமிடங்கள் 15 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.

இந்த வயதில் ஓட்டப்போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற முருகவேல் பொன்னம்பலத்தை பலரும் பாராட்டியுள்ளதுடன் அவர் போட்டியில் பங்குபற்றிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.