இறுதிக்கட்ட புனரமைப்புப் பணிகளில் நல்லூர் சங்கிலியன் தோரண வாயில்! 

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள சங்கிலியன் தோரண வாயிலானது யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் புனரமைக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல், அவற்றைப் பாதுகாத்து, எமது எதிர்கால சந்ததியினருக்கு அந்தச்சின்னங்களை ஒப்படைக்கவேண்டிய தார்மீகக் கடமையுணர்வோடு யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்