பெரும் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு மரணதண்டனை நடைமுறையாக வேண்டும்!  திருமலை பள்ளி வாயல்களின் சம்மேளன செயலர் எம்.எம்.மஹ்தி  கருத்து

தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச்செயல்களை குறைப்பதால் மரண தண்டனையை நடைமுறைப் படுத்துவதே ஒரே தீர்வாக அமையும் என திருகோணமலை மாவட்ட பள்ளி வாயல்களின் சம்மேளன செயலாளரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார்

தொடர்ந்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு –

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை, போதை பொருள் வியாபாரம் போன்ற பெரும் பெரும் குற்றச் செயல்கள் அண்மைக் காலங்களில் பாரிய அளவில் அதிகரித்துச் செல்கின்றன.

இதன் காரணமாக சிறுவர்கள், பெண்கள்,  குடும்பங்கள் என பலரும் அநியாயமாக பாதிக்கப் படுவதோடு பொது மக்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்வி குறியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே இவ்வாறான குற்றச் செயல்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் அரசு உடனடியாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.