பொதுமக்களின் சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த உள்ளூராட்சிமன்றங்களுடன் விசேட கலந்துரையாடல் 

கல்முனை சுகாதார பிராந்தியத்துக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்௧ளுடனான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாதினால் இணைப்புச் செய்யப்பட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில்நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் டெங்கு கட்டுப்பாடு மற்றும் உணவகங்களில் சுத்தமான சுகாதாரமான உணவினை வழங்குவதை உறுதிப்படுத்துதல் மற்றும் மீன் விற்பனையில் மண் கலப்படம் விலங்கறுமனைகளின் தரம் மற்றும் உணவகங்களை மேற்பார்வை செய்வது தொடர்பான சுகாதார நிறுவனங்களின் உப விதிகள் உள்ளூராட்சி மன்றங்களின் உப விதிகள்  போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில்  உள்ளூராட்சி மன்றங்களும் சுகாதார நிறுவனங்களும் இணைந்து எதிர்காலத்திலும் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதெனவும் பிராந்திய மக்களின் சுகாதார மேம்பாடு டெங்கு கட்டுப்பாடு உணவகங்களின் தரம் மற்றும் ஏனைய சுகாதார நலன் சார் விடயங்களை ஒன்றிணைந்து வெற்றி கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக கடந்த காலங்களில் டெங்கு கட்டுப்பாட்டுக்கு உதவிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் பணிப்பாளரால் விசேடமாக நன்றிகள் தெரிவிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், சபை செயலாளர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித் மற்றும் பிரிவுத் தலைவர்களும் ஏனைய துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.