விசேட தேவையுடையவர்களுக்கு தொழிலுக்கு ஊக்கப்படுத்த பயிற்சி! 

மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்  மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.தால்சுறுன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களைத் தொழிலுக்கு ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களைத் தொழில் ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சிநெறி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்கின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது விதாதா  வள நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் , மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் அருளானந்தம், எம்.வாயில், எஸ்.ராகினி ஆகியோர் உட்பட பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்