போதைப்பொருள்கள் பாவனை ஒழிப்பு பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக ‘போதைவஸ்து பாவனை ஒழிப்பு’ எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக, சாய்ந்தமருது சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின்  சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம் அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத்,  பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நூருல் றிபா கலந்து கொண்டதுடன்  வளவாளராக கல்முனை பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என். முஹம்மது தில்ஷான் கலந்து கொண்டு போதைப் பாவனையால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில்  சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

இதன் மற்றுமொரு அங்கமாக சாய்ந்தமருது – 03, 05 ஆம் பிரிவு பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-கமரூன் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் ,  பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நபார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வளவாளராக  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் என்.எம்.நௌசாத்  கலந்துகொண்டு போதைப் பாவனையால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக சொற்பொழிவாற்றினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.