முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி நேற்று  மருதனார்மடத்தில் அஞ்சலி!  கஞ்சியும் மக்களுக்கு வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாளை மறுதினம் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நிலையில் நேற்று காலை 8 மணிக்கு நினைவு ஊர்தி மருதனார்மடத்தைச் சென்றடைந்தது. அங்கு வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் நினைவு ஊர்தியில் உள்ள தீபத்துக்கு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.

தொடர்ந்து அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மருதனார்மடத்தில் உள்ள வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் ஊர்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்