நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்துக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி சென்றது!  குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கும் அஞ்சலி

திங்கட்கிழமை யாழ். நகரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி நேற்று காலை காங்கேசன்துறை வீதி வழியாக மருதனார்மடத்தைச் சென்றடைந்து அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தொடர்ந்து மானிப்பாய் சென்பீற்றர்ஸ் தேவாலயத்தை சென்றடைந்தது.

அங்கு சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல், முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பாக உணர்வுபூர்வமான வலிசுமந்த கதைகூறும் அஞ்சலி உரைகளை வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமாணக் குண்டும் தாக்குதலில் பலியான பச்சிளம் சிறார்களின் நினைவுத் தூபிக்கு உணர்வுபூர்வ அஞ்சலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தப் பிரதேச மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியிலுள்ள தூபிக்கு மரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் நல்லாயான் முன்பள்ளி சிறுவர்கள் தாம் அறியாத காலத்தில் நடந்த படுகொலைகளை நினைந்து அகம்தாழ்ந்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.