யாழில் தனிமையில் இருந்த ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது 65) என்பவரே அவரது வீட்டின் மலசல கூடத்தில் எரிகாயங்ஙளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும், அவரை தேடி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு சென்ற நபரே, ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அவதானித்த நிலையில் அயலவர்களுடன் இணைந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை  குறித்த ஆசிரியரின் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலசல கூடத்தில் வழுங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்