முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின்   தலைமையில் வியாழக்கிழமை 18.05.2023 நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த அஞ்சலியின் பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீர்த்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று தொகுதிக் கிளை செயலாளர் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன் தமிழரசுக்கட்சி மூலக்கிளைகளின் பிரதிநிதிகளான சிவகுமார்,ஜெறோம்சன், மிதுன் சமூக சேவகர் ஜொய்ஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்