மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும்   பாதிரியாரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை!  பிரசன்ன ரணதுங்க போர்க்கொடி

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு எதிராக அரசமைப்பு ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டத்தில் இருந்து பௌத்த மதத்துக்கு எதிராக பேசியவர்கள் மீதும், தலதா மாளிகைக்கு எதிராகப் பேசியவர்களுக்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு –

கேள்வி :- அமைச்சரே, உங்கள் முன்னாள் ஆளுநர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனரே…

பதில் :-  ஆளுநர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். அப்படித்தான் நடக்கிறது.

கேள்வி :- உங்கள் ஜனாதிபதியின் கீழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதுள்ள அரசாங்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இது நியாயமானதா?

பதில் : இல்லை, அதில் தவறில்லை. ஒவ்வொரு அரசாங்கத்திலும் புதிய ஜனாதிபதிகள் நியமிக்கப்படும்போது, ஜனாதிபதிகள் அந்த சந்தர்ப்பங்களில் ஆளுநர்களை நியமனம் செய்கிறார்கள். இந்த முறையும் அதுதான் நடந்தது. அது தொடர்ந்தும் நடக்கும்.

கேள்வி :- எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என கூறுகிறார்களே…?

பதில் :- இது சில ஊடகவியலாளர்களின் பிரசாரம். மொட்டு கட்சியிலோ அரசாங்கத்திலோ அவ்வாறானதொரு தீர்மானமோ அல்லது கலந்துரையாடலோ நாட்டிலே இல்லை.

கேள்வி :- இதற்கு நீங்கள் பொருத்தமானவர் இல்லையா? ஏனெனில், கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிக விருப்பத்தேர்வுகள் உங்களுக்குக் கிடைத்தனவே…!

பதில் :- விருப்பங்கள் மற்றும் பிற விஷயங்களை விட மூத்த பிரஜை மற்றும் செயல்திறன் மிகவும் முக்கியமானது. இதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது நியமிக்கப்பட்டுள்ளார். இது எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டது. கட்சி என்ற ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது மிகவும் பொருத்தமான நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான ஆளுநர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் கதைக்கின்றனவே?

பதில் :- தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் வடமேல் மாகாணத்தில் இல்லை. பொய்களை பேசி இந்த நாட்டை ஒன்றும் செய்ய முடியாத பாதாளத்துக்கு அனுப்பும் குழுக்கள் செய்யும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவது உண்மையா…?

பதில் :- போராட்டத்தின்போது என்ன நடந்தது? போராட்டத்தின்போது காலி முகத்திடலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? சிங்கள இனம் இல்லை, மதம் இல்லை. இந்த நாடு இப்படித்தான் இருக்கிறது என்று பிக்குமார்கள் பேசவில்லையா? அப்போது யாரும் அதை எதிர்க்கவில்லை.

ஓர் அரசு ஏதாவது செய்ய முயலும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். விகாரை, தேவாலயம் எல்லாம் போராட்டத்தில் இருந்தது. அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் இருந்தனர். பிறகு அதையெல்லாம் செய்வது நல்லது. ஆனால், சில ஏற்பாடுகள் செய்து தீர்வு காணப்போகும் போது, இப்போது அவர்கள் சத்தம் போடுகிறார்கள். நாட்டு மக்கள் இதில் புத்திசாலிகள்.

கேள்வி :- மூன்று ஆளுநர்களை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ரணில் மற்றும் சஜித் ஆகியோர் ஒன்றிணைவார்கள். பிறகு மொட்டுக்கு என்ன நடக்கும்?

பதில் :- எங்களில் யாராவது ஒரு ஜனாதிபதியை நியமித்துள்ளீர்களா? ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஜனாதிபதி தேர்தல் வரும்போது சிறந்த வேட்பாளர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும்.

கேள்வி :- ரணில் வந்தால் ரணிலுக்கு ஆதரவளிப்பீர்களா?

பதில் :- ரணில் விக்கிரமசிங்க தகுதியானவர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம்.

கேள்வி :- அவர் பௌத்த மதத்துக்கு எதிரான போதகர் ஒருவர் மீது குற்றம் சுமத்தியுள்ளாரே…?

பதில் :- அரசமைப்பின் பிரகாரம், மத போதகருக்கு எதிராக செயற்பட முடியும். போராட்டத்தில் இருந்து பௌத்தத்துக்கு எதிராக பேசியவர்கள் மீதும், தலதா மாளிகை பற்றி பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு நேரங்களில் வரும் பெய்கள் இவை. நாட்டைப் பற்றி சிந்தித்து வேலை செய்பவர்கள் சிந்திப்பதில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்களிடம் ஒப்படைத்து நாட்டைப் பற்றி சிந்தித்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

கேள்வி :- டெங்கு தொடர்பான அடுத்த வேலைத்திட்டம் என்ன?

பதில் :- நாடு முழுவதும் டெங்கு ஆபத்து தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக ஜனாதிபதியின் வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்டக் குழுக்கள், பிரதேசக் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு, உள்ளூராட்சி அமைப்புகளையும், கிராமக் குழுக்களையும் தொடர்புகொண்டு, கிராம மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, கிராமக் குழுக்களுக்கு உள்ளது. பிரதேச செயலக அலுவலகங்கள், சுகாதார திணைக்களங்கள், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஏற்கனவே தலையிட்டு தேவையான உதவிகளை வழங்கியுள்ளன.

கேள்வி :- தற்போது கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் சிகிச்சை மற்றும் மருந்துகளின் நிலை எப்படி உள்ளது?

பதில் :- மருத்துவமனைகளுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து மாவட்டத்தின் நிலையை அளவிடுவது கடினம். தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் தேசிய திட்டமாக, சுகாதாரத் துறைகள் எல்லா இடங்களிலும் இதையே செய்கின்றன. – என்றார். (5)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.