முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்தமையால் நான் பதவி நீக்கப்படவுள்ளேன்! எம்.பிக்கள் மனச்சாட்சியுடன் செயற்படவேண்டும் என ஜனக ரத்நாயக்க ஆதங்கம்

மின்சாரத்துறை அமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிஇ மக்களுக்காக குரல் கொடுத்ததால் பதவி நீக்கப்படவுள்ளேன்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் அறிவுடன் செயற்பட வேண்டும் அல்லது அறிவார்ந்த தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

இந்த இரண்டையும் தவிர்த்து தன்னிச்சையாக செயற்பட்டால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

மின்சாரத் துறை கட்டமைப்பு தொடர்பில் மின்வலுத்துறை அமைச்சர் எடுத்த முறையற்ற தீர்மானங்களை அறிவுபூர்வமாகச் சுட்டிக்காட்டியதால் அவரது அழுத்தத்துக்கு அமைய என்னை பதவி நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

என்னை பதவி நீக்கம் செய்யும் குற்றப்பிரேணை எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டவுள்ளது.

முறையற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புஇ பரீட்சை காலத்தில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புஇ நிலக்கரி கொள்வனவின் முறைகேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தமை ஆகியன எனக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் பிரதான குற்றச்சாட்டுக்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமானது. ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும் போது மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசியல் அதிகாரத்தைப் பிரயோகித்து தன்னிச்சையாக செயற்பட்டார். மின்சாரத்துறை அமைச்சருக்கு இந்த துறைசார் அறிவு கிடையாது. துறைசார்ந்த தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளைக் கேட்கும் மனநிலையும் அவருக்குக் கிடையாது.

நான் நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டேன். 225 மக்கள் பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்துள்ளார்கள். ஆகவேஇ எனக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். என்னை பதவி நீக்குவதால் பொருளாதார ரீதியில் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் நிலை இல்லாமல் போகும்.

என்னை பதவி நீக்குவதால் மின்கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. மின்சாரத்துறை அமைச்சர் ஒன்று அறிவுடன் செயற்பட வேண்டும் அல்லது அறிவார்ந்த தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இவ்விரண்டையும் தவிர்த்து தன்னிச்சையாக செயற்பட்டால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.