இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க சீனா தயார்!

சீனாவின் வாங் யூபோ மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு யுன்னான் மாகாண ஆளுநர் வாங் யூபோ தெரிவித்துள்ளார்.

வாங் யூபோ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி மற்றும் தொழிநுட்ப திறன் மேம்பாட்டிற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று கொழும்பின் சில முக்கிய பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன் கண்டி, பொலன்னறுவை மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன் குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.