தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பீட கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்கும் இந்த மகத்தான முயற்சியை நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டியுள்ளார்.
வளமான, பாதுகாப்பான மற்றும் ஸ்திரமான இலங்கைக்கு ஊழலை ஒழித்தல், ஊழலை ஒழிக்க நிர்வாக மற்றும் பொதுச் சேவை பொறிமுறைகளில் மாற்றங்களைச் செய்தல், சுயாதீனமான மற்றும் திறமையான சட்டத்தை அமுல்படுத்த வலுவான , பலதரப்பட்ட சட்ட அமைப்பு தேவை, ஆட்சியைப் பேணுதல், சட்டம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான பலமானதும் பயனுள்ளதுமான நிர்வாகம், காலநிலை இணையப் பாதுகாப்பு, பாதுகாப்பு பரிமாணங்களை மாற்றுதல், காலநிலை மாற்றம், இந்த நெருக்கடியான தசாப்தத்தில் உடனடி உலகளாவிய நடவடிக்கைகள், சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விரைவான பதில்கள் உட்பட பல தலைப்புகள் தொடர்பில் இந்த அமர்வில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் , தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை