டுபாயிலிருந்து இரண்டு கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிப்பு!

டுபாயிலிருந்து சுமார் 4 கோடி ரூபா  பெறுமதியான 2 கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூன்று பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்கத்தை கைப்பற்றியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், 12 இலட்சம் ரூபா அபராதம் விதித்து குறித்த நபரை விடுவித்ததாக சுங்கப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்