சுதந்திரமுன்னணியின் பொதுசெயலர் விவகாரம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறக்கை வெளியீடு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சர் மஹிந்த அமரவீரவை அல்லது திலங்க சுமதிபாலவை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக தம்மை அங்கீகரிக்குமாறு திலங்க சுமதிபால அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

அதனையடுத்து, தாமே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்வதாக அமைச்சர் அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

இவ்விரு கோரிக்கைகளையும் பரிசீலித்த தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகள் முடியும் வரை இருவரையும் கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.