மன்னிப்பு கேட்பதன் மூலம் ஜெரோம் பெர்னாண்டோ தப்பமுடியாது – டிரான் அலஸ்

மன்னிப்பு கேட்பதன் மூலம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தப்ப முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மன்னிப்பு கோரியதால் அவருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காமலிருக்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாராவது தவறிழைத்துவிட்டு மன்னிப்பு கோரினால் அதற்காக நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்காமலிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள டிரான்அலஸ் கடந்தகாலத்தில் அவ்வாறு நாங்கள் செயற்படவில்லை எதிர்காலத்திலும் அவ்வாறு செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுக்கின்றனர் எனவும் அவர் குறிபிப்பிட்டுள்ளார்.

சிஐடி விசாரணையின் போது அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் குறித்து நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம், நீதிமன்றம் அவருக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்த நபர் நாடு திரும்பியதும் சிஐடியினரிடம் ஒப்படைக்கப்படுவார் என டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் சிஐடியினர் அவரை விசாரணைக்குட்படுத்தி வாக்குமூலம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்