சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிசங்க முகாமையாளராக றியாத் ஏ. மஜீத்!

சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்று கடமையாற்றிய றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளராக நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சமுர்த்தி வங்கிச் சங்க காரியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா, சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, வலய உதவி முகாமையாளர் எம்.எஸ்.எம்.நௌஷாட், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம். முபாறக், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் எம்.முபிதா, முன்னள் தலைவர் ஏ.எம்.அலாவுதீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது – 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி  வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார் 16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமை யாற்றியுள்ள இவர், அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்கத்தின் உதவி முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றியுள்ளார்.

அண்மையில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று கடமையாற்றி வந்த நிலையில், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளராக றியாத் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே சமயம் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளராக கடமையாற்றிய எஸ். றிபாயா சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக நேற்றுத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்