கனேடிய பிரதமர் கருத்துக்கு அரச எதிர்ப்புக்குக் கண்டனம்! தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை அரசாங்கம் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாத இலங்கை அரசாங்கம் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்றும், இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டனம் வெளியிட்டதுடன் அதனை நிராகரித்துமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்