பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளைப் பயன்படுத்துவோம்!  அமைச்சரவை பேச்சாளர்

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்புக் கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்க முடியாது.

எனவே, மனசாட்சிக்கமையவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. அவர் நாட்டுக்கு இழைத்துள்ள பாதிப்புக்கள் தொடர்பில் தரவுகளுடன் நாடாளுமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அரசியல் நியமாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபரொருவர் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வௌ;வேறு நிபுணர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவாரானால், அதற்கு எந்தவொரு அரசாங்கத்தால் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானவர்கள் குறிப்பிடுவதைப் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தால் இன்றும் நாடு நெருக்கடியிலேயே காணப்பட்டிருக்கும்.

கடந்த காலத்தில் இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடைந்த நஷ்டம் தொடர்பில் அறிந்தவர்கள் இவரைப் போன்று செயற்பட மாட்டார்கள்.

சுமார் 500 பில்லியன் ரூபாவை விட அதிகளவில் இவை நஷ்டமடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமையால் எம்மால் தன்னிச்சையாக விலைகளைத் தீர்மானிக்க முடியாது.

எனவே தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்புக் கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க முடியாது. எனவே, மனசாட்சிக்கமையயே நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.