மனித உரிமை மக்கள் பாதுகாப்பு அமைப்பால் 2023 இல் இரு ஊடகவியலாளர்களுக்கு விருது!

மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் 2023 விருது வழங்கல் விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக இந்திய நாட்டைச் சேர்ந்த ஆசிய நாடுகளுக்கான சேவைகள், அரசமைப்பு மற்றும் பாதுகாவலர் அமைப்பின் வெளியுறவு அமைச்சர் பி.ஐயப்பன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், இந்திய நாட்டின் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் நிறுவுநரும் தலைவருமான டாக்டர் கே.எம்.சென்தூர் பாண்டியன், சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் பிரதம ஆலோசகர் டாக்டர் மோகன் லால் அஜிகுமார் அத்மா உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திவருகின்ற ஆளுமைகளை வருடாந்தம் கௌரவித்து வருகின்ற செயற்பாடுகளை மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு தவறாது செய்து வருகின்றது. அதற்கினங்க, இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் 60 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குப் பதக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் கடந்த வருடம் சுற்றுச் சூழல் தொடர்பாக பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (துஷாரா) கடந்த வருடம் ஆயுர்வேத மருத்துவ மூலிகை கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும் இரு ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்