கொழும்பு-15 காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆராய்வு!

கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து இன்று வியாழக்கிழமை (25) கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

குறிப்பாக, காக்கைதீவு பகுதியில் உள்ள கால்வாய்களை புனரமைத்து சுத்தப்படுத்துவது, காக்கைதீவு கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மெருகூட்டுவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

காக்கைதீவு கடற்கரை பூங்கா பகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்