உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதி புதிய ஆலோசகர் நியமனம்

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஊடகச் செயலாளர் விராஜ் தாரக சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரோசி சேனாநாயக்க இன்னும் குறித்த பதவி ஏற்கவில்லை. பெரும்பாலும் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்