தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

இதேவேளை நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின்  சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்