சிம்பாப்வே போதகரை வரவேற்பதற்காக விமானநிலைய அதி உயர் பாதுகாப்பு பகுதிக்குள் சென்றார் ஜெரோம்!  அனுமதிவழங்கியது யார்? வெளியாகியது புதிய படம்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ கடந்த வருடம் சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலை வரவேற்பதற்காக கொழும்பு விமானநிலையத்தின் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என கேள்விகள் எழுந்துள்ளன.

ஜெரோம் பெர்ணாண்டோ தனது தனிப்பட்ட செல்வாக்கையும் அரசியல்செல்வாக்கையும் பயன்படுத்தி பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானநிலையத்தின் பாதுகாப்பு ரீதியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மிக முக்கிய இராஜதந்திரிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் விவிஐபி பஸ்ஸில் ஜெரோம் பெர்ணாண்டோ சிம்பாப்பே போதகருடன் காணப்படும் படம் கிடைத்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துதெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின்ஹெரத் அந்த படம் விமானநிலையத்தின் அதி உயர்பாதுகாப்பு பகுதிக்குள் எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்துள்ளார். அந்த பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜெரோம்பெர்ணாண்டோ எவ்வாறு பெற்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொறியியலாளரை தவிரவேறு எவரும் அந்த பகுதிக்குள் நுழைய முடியாது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளார்  அவர்கள் விருந்தினர்களிற்காக காத்திருக்கும் பகுதியில் அல்லது ஓய்வறையில் காத்திருக்கலாம். ஆனால் அவர்கள் மிகமிக முக்கியமான பிரமுகர்களிற்கான பஸ்ஸில் ஏற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள்இது எவ்வாறு இடம்பெற்றது என ஆராயவேண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.