கண்ணாடிபெட்டி உடைத்து புத்தரின் சிலையும் கவிழ்ப்பு! இமதுவவில் சம்பவம்

இமதுவ அகுலுகஹா பிரதேசத்தில் காணப்படும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி ஒன்று உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் புத்தர் சிலைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த புத்தர் சிலை மலர் தூவப்பட்டிருந்த பகுதியில் முகம் குப்புற வீழ்ந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பலர் பொலிஸுக்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்