திருமலை அல்தாரீக் தேசிய பாடசாலையின்  55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிக்கெட் சுற்றுப்போட்டி!

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட
திஃஅல் தாரீக் தேசிய பாடசாலையின் 55 வருட நிறைவை  முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான இரண்டாவது  மாபெரும்
‘அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்’அல்
தாரிக் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் முதல்வர்
ஐ.எம்.தௌபீக் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் செயலாளர்
ஏ.ஜி.எம்.பஸால் ஆகியோரின்  தலைமையில் நடைபெற்றன.

இக்கல்லூரியில் கல்வி கற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 24 அணிகள் பங்கு பற்றின. இதன் ஆரம்ப நிகழ்வு ஊர்வலத்தோடு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பாடசாலையில் கற்பித்த பல முன்னால் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களும்
கலந்து கொண்டார்கள். இந்த அழகிய தருணம் ஒவ்வொரு அல்தாரிக்கேயனின் பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த பொற்காலத்தை ஞாபகமூட்டுவதாக அமைந்திருந்தது.

மூன்று நாள்கள் நடைபெற்ற சுற்றுப் போட்டிகள் 8 ஓவர்களை கொண்ட அணிக்கு11
பேரைக் கொண்ட விலகல் அடிப்படையில் அமைந்திருந்ததோடு, 24 அணிகளும்
ஒன்றையொன்று எதிர்த்தாடின.

இறுதிப் போட்டிக்கு 2008 ஆம் ஆண்டு அணியும், 2015 ஆம் ஆண்டு அணியும்
ஒன்றையொன்று மோதி 2008 ஆம் ஆண்டு அணி அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட்
வெற்றிக் கிண்ணத்தினையும் பெறுமதியான பணப்பரிசிலையும் தனதாக்கி 2023 ஆம்
ஆண்டுக்கான சாம்பியன் முத்திரையைப் பதித்தது.

இந்நிகழ்வின் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப்
உதவிப் பணிப்பாளர் ஏ.எல். சிராஜ்,அல் தாரிக் தேசிய பாடசாலையின் அதிபர்
ஐ.எம்.தௌபீக்,யாரா குளோபல் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரும்,
ஈஸ்டன் டயர் ஹவுஸ் முகாமைத்துவ பணிப்பாளருமான பி.எம்.எம்.அஸ்ரப் ,கல்வி
அதிகாரிகள் பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.