05 மாணவர் கற்கை வள நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் திறந்துவைப்பு!

 

அம்பாறை மாவட்டத்தில்  திருக்கோவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் உகன ஆகிய ஐந்து பிரதேசங்களில் தலா 5 பாடசாலைகளில் மாணவர் கற்கை வள நிலையங்கள்  திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

சோவ்ட் நிறுவனத்தால் ஜிசர்ட் மற்றும் கெல்விற்றாஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற எம்பவர் செயற்திட்டத்தின் கீழ் வன்முறை தீவிரவாதத்துக்கு எதிராக மாணவர்கள் மீளெழும் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கில்  இது நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இங்கு கணினி ,பிறின்ரர், தளவாடங்கள், நவீன மாணவர் கதிரைகள், புத்தகங்கள்,
அலுமாரி முதலான பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுவாட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் க.பிறேமலதனின் வழிகாட்டலில் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட  கோரக்களப்பு சக்தி வித்தியாலயத்தில் மாணவர்கள் கற்கை வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் வி.விமலேஸ்வரன்  தலைமையில்  நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கெல்விற்றாஸ் நிறுவனத்தின் எம்பவர்
செயற்திட்டத்திற்கு கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற
ரி.ரமேஸ் , மற்றும் கெல்விற்றாஸ் எம்பவர் செயற்திட்ட நிதி
உத்தியோகத்தர் சசிகலா  ,திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்,
பிரதி கல்விப்பணிப்பாளர் .ரி.கங்காதரன் , கோட்டக்கல்வி
அதிகாரி.எஸ்.ரவீந்திரன்  ,பிரதி அதிபர் தி.தியாகராஜா,சுவாட் நிறுவனத்தின்
தலைவி திருமதி கஜேந்தினி சுவேந்திரன் , சுவாட் நிறுவனத்தின் திட்ட கள
உத்தியோகத்தர்களானஎஸ்.ஆனந்தராசா , செல்வி தீச்சிக்கா ஆகியோர் கலந்து
கொண்டனர். மற்றும் திட்டத்தில் இணைந்து கொண்ட ஆசியரியர்கள் மற்றும் மாணவர்களும்
கலந்து கொண்டனர்.

இதேபோல் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் மாணவர் கற்றல் வள
நிலையம் திறந்து வைக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.