நாட்டில் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்குக! சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜூலி சங் வலியுறுத்து
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு வலுவான சட்டத்துறை அனைத்து பிரஜைகளும் நீதியைப் பின்தொடர்வதை ஊக்குவிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டின் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் அவர் கோரிக்கை விடுததுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை