உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்ட நீர்கொழும்பு பிரதேச செயலாளர்!

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார்.

அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) காலை அவசர தேவைக்காக  ஊழியர் ஒருவர், பிரதேச செயலரின் இல்லத்துக்குச் சென்றபோது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில்,  குறித்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்