மக்கள் ஆணை இல்லாத அரசின் செயற்பாடுகளை ஏற்க மாட்டோம்! எஸ்.எம்.மரிக்கார் திட்டவட்டம்

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசாங்கம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இதேபோன்று ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தின் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1997 இல் அதனை நிறைவேற்ற முடியாமல் போனவுடன், அந்த அரசாங்தக்திற்கு எதிரான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஊடக நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டன. அந்த ஊடக நிறுவனங்களை வீழ்த்த வேண்டும் என்று அரசுக்கு சார்பான நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.

மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியும் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கமும் இணைந்து மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஜனநாயகம் தொடர்பாக பேசும் ஜனாதிபதி, ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகத்திலும் ஊடக சுதந்திரம் ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏன் நாம் மட்டும் பின்னோக்கி பயணிக்க வேண்டும்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து, எமக்கெல்லாம் ஜனநாயகத்தை கற்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மொட்டுக் கட்சியின் வாக்குளால் ஜனாதிபதியான பிறகு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது’ என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.