பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கல்முனையில் உலருணவு பொதி வழங்கல்!

பாறுக் ஷிஹான்

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்   சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருள்கள்  நற்பிட்டிமுனை சுமங்களி மண்டபத்தில்   இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் கல்முனை பிரதேச பொறுப்பாளர் ஜே.ஆர் . தர்மராஜ்  தலைமையில்  செவ்வாய்க்கிழமை மாலை  இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.அமலதாசன்   பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக சமாதான நீதிவான் எஸ்.சண்முகநாதன், நற்பிட்டிமுனை பல நோக்கு கூட்டுரவு சங்க தலைவர் சிறிவேல்ராஜா,  இரா.குணசிங்கம்,  நற்பிட்டிமுனை சமய  செயற்பாட்டாளர் வி.சிசுபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நற்பிட்டிமுனை அறநெறிப் பாடசாலை அதிபர் திருமதி மோகன் ஜெனிதா, நற்பிட்டிமுனை  வர்ண கடை உரிமையாளர் ப.கேமதர்சன், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் அஸ்நீதன் இந்து ஸ்சுயம் சேவக சங்க அம்பாறை மாவட்ட செயலாளர் வரதராஜன் , சுயம் சேவக உறுப்பினர்களான துலக்சன், காந்தன், உறுப்பினர்கள் துசாந் ஆகியோர் கலந்துகொண்டு வருகை தந்த 73 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.