கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முன்னால் உபவேந்தருக்கு அஞ்சலி!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார்  தனது 89 ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 ஆவது உபவேந்தரான அன்னாரின் பூதவுடல் இன்று (வெள்ளிக்கிழமை) பி.ப.12 மணி தொடக்கம் 1.30 வரை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

1995 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய இவர் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினராகவும் மூன்றாண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

காலஞ்சென்ற அருட்தந்தையின்   இறுதி அஞ்சலித்  திருப்பலி  நாளை (சனிக்கிழமை) புளியந்தீவு, புனித மரியாள் பேராலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம் பெறவுள்ளதுடன், இறுதி அஞ்சலி திருப்பலி நிகழ்வைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஆலையடிச்சோலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்