தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஜூன் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு.

2023 ஜூன் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும,; காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களுக்கு மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.