சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினநிகழ்வு சாய்ந்தமருதில் நடந்தது!

நூருல் ஹூதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக
‘புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு – மகிழ்ச்சி நிறைந்த புதியதோர்
கிராமம்’ என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம்
14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான
காலமாகப் பிரகடனப்படுத்தி மக்களுக்கான விழிப்புணர்வும் கொடிவிற்பனை
வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஓர் அங்கமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வு
சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி
உதவியாளர் யு.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட
முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.
ஆசிக்கும், சிறப்பு அதிதியாக நிதா உல் பிர் நிறுவன பணிப்பாளரும்
சமூக சேவையாளருமான இஸட்.எம்.அமீனும் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக
பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி முகாமைத்துவ
பணிப்பாளர் றியாத் .ஏ.மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர்
ஐ.எல்.எஸ்.ஹிதாயா, பிரதம முகாமைத்து சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன்,
திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்து சேவை  உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.
றியாஸ், பிரதேச சமுர்த்தி சமூதாய அமைப்பின் தலைவரும், ஊடகவியலாருமான
எம்.ஐ. சம்சுதீன், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கிடைக்கின்ற நிதி  வறிய பாடசாலை மாணவர்கள், வயோதிபர்களின்
நலத்திட்டங்கள், வறிய  மக்களுக்கான சுகாதார, குடிநீர் வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.