சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தேசிய கல்வியியற் கல்லூரிமாணவர்கள் ஊர்வலம்

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன்,
மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் திங்கட்கிழமை மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடாந்து சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

தேசிய கல்வியியற் கல்லூரியில் இருந்து பூந்தோட்டம் சந்தி வரை ஊர்வலமாகச் சென்ற ஆசிரிய மாணவர்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பான படங்களையும், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், பூந்தோட்டம் சந்தியை அடைந்ததும்,பொதுமக்களுக்கு மரநடுகைக்கான மரங்களை விநியோகித்ததுடன், மீண்டும் ஊர்வலமாக தேசிய கல்வியியற் கல்லூரியை வந்தடைந்தனர்.

கல்லூரி வாயிலில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான குறியீட்டு நாடகம் ஒன்று ஆசிரிய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.