கஜேந்திரகுமார் கைதானமைக்கு பிரித்தானிய எம்.பியும் கண்டனம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளமையை  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார்.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய அட்டூழியங்கள் இனப்படுகொலைகளிற்கான நீதி  மற்றும்  இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகக் குரல்கொடுக்கும் தமி;ழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தக் கைது அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சியோபன் மெக்டொனாக்கும் கண்டித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்