யானை தாக்கி ஓட்டோ சேதம்!
எப்.முபாரக்
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் காட்டு யானை ஓட்டோ ஒன்றைத் தாக்கியதில் சேதமடைந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொசன் பண்டிகைக்காக தனது மகளைப் பார்ப்பதற்காக கண்டியில் இருந்து சென்ற
ஓட்டோ நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை வீட்டில் வைத்து இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் சீனி புர பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் கவனம்
செலுத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை
விடுக்கின்றனர்.













கருத்துக்களேதுமில்லை