யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் அதிகஷ்ட குடும்பத்துக்கு வீடு வழங்கல்!

 

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வதற்கான 5 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடு ஒன்று அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் லலிதா அம்மையாரின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் கனடா வாழ் டில்சான் நவரட்ணராஜா, தனுஜா சேகர், சகு கேசவன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் நலன் கருதி இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் மயூரிக்கா ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக டிலீபன் நவரட்ணராஜா, திருமதி டிலானி நவரட்ணராஜாவும் கௌரவ விருந்தினராக ஆளுநர் சபை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லயன் சு.ஜெயபாலன், பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாவட்ட முதன்மை நிலை தலைவர்கள் மற்றும் ஏனைய லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.