யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது…T

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் (14.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏழாலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். அவரிடமிருந்து 1கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் நடவடிக்கை

யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Arrested With Drugs In Jaffna

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.அச்சுவேலி

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கசிப்புடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த கைது நடவடிக்கையானது இன்று (15.06.2023) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Arrested With Drugs In Jaffna

 

அச்சுவேலி பகுதியிலிருந்து ஊரெழு பகுதிக்கு 3,000 மில்லிலீற்றர் கசிப்பினை எடுத்து சென்றபோதே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.