இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மணவறை திறப்பு!

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான ‘பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்’ அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தாலிக்குப் பொன்னுருக்கல் மணவறையை திறந்து வைத்துள்ளது.

கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும்.

திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொழும்பில் வீடுகளில் பொன்னுருக்குதல் செய்யப்படும் போது அதற்கான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன.

இதைக் கருத்திற் கொண்டே பொன்னுருக்கு மணவறையை  பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருமணத்துக்கு முன்பாக புகைப்படம் எடுக்கும் கலாசாரம் பரவலாக காணப்படுவதால் இந்த நிகழ்வுகளையும் பொன்னுருக்குதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.