மோசடி நடவடிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம்…T

இலங்கையில் பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏமாற்று நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்திற்காக பேருந்துகளை பயன்படுத்தும் மக்களிடத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் கும்பல் பல பிரதான நகரங்களில் உலாவி வருகின்றனர்.

வீதியோரங்களில் இருந்து யாசகம் பெறும் முறை, மற்றும் பேருந்துகளில் ஏறி யாசகம் பெறும் முறை போன்ற பல்வேறு முறைகளில் யாசகம் பெற்று வந்தவர்களை கண்டிருப்போம்.

மோசடி நடவடிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம்..T

அதனையும் தாண்டி, விபத்தில் படுகாயமடைந்து உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, உறவினர்களின் உடல் நிலை மோசம் என தெரிவித்து பல்வேறு மருத்துவ சான்றிதழ்களை காட்டி பயணிகளிடம் பணம் பெற்றுக்கொள்வோரும் உண்டு.

எனினும், கிட்டத்தட்ட பல மாதங்களாக ஒரே சான்றிதழையும் துண்டுப்பிரசுரங்களையும் வைத்து பொதுமக்களிடத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் ஏமாற்று வேலையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை உண்மை என நம்பும் பல பயணிகள் அவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். அத்துடன், இது பிரதான நகரங்களில் உள்ள பேருந்துகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனியார் பேருந்துகளில் பயணிப்போரிடம், பேருந்தின் நடத்துனர் போன்று நாடகமாடி பேருந்து கட்டணம் வசூலிப்பது போன்று கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக தூர இடங்களுக்கு பயணிக்கும் பல பயணிகள் பேருந்து கட்டணம் என்று பெருந்தொகை பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.

இது போன்ற சம்பவம் அண்மையில் மலையகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது, தனது மகள் வீட்டுக்கு பயணித்த வயதான பெண்மணி ஒருவர் பேருந்து நடத்துனர் என எண்ணி மோசடியாளரிடம் இருந்த பணத்தை கொடுத்துவிட்டு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டதும் சக பயணிகளிடம் பேருந்து சீட்டுக்கான பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி தங்களது உடமைகளை இழந்து விட்டதாகவும் பேருந்தில் செல்ல பணம் வேண்டும் என தெரிவித்து பலரிடம் பணம் பெற்று ஏமாற்றும் சில நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, யாசகம் கேட்போரிடமும், பணப்பையை இழந்துவிட்டதாக தெரிவித்து பணம் கேட்கும் நபர்களிடம் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்